Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாரிய குற்றங்களை சட்டரீதியாக தண்டிப்பதில் இலங்கை தோல்வி!

In இலங்கை
Updated: 09:13 GMT, Jan 14, 2018 | Published: 06:36 GMT, Jan 14, 2018 |
0 Comments
1146
This post was written by : Risha
DTZyUNNV4AEmEsN

வரலாற்றை நோக்குமிடத்து பாரிய அட்டூழியங்களான குற்றங்களை சட்டரீதியாக தண்டிப்பதில் இலங்கை குறிப்பிடத்தக்க தோல்வியைக் கண்டுள்ளது என சட்டத்தரணி நிரான் அங்கிற்றல் தெரிவித்தார்.

நிலைமாறு காலத்தில் நீதி என்ற தொனிப்பொருளில் கொழும்பிலுள்ள இனத்துவ ஆய்வுகளுக்கான கற்கைநிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உண்மை ஆணைக்குழு என்ற எண்ணக் கருவானது இலங்கையைப் பொறுத்தவரையில் மிகவும் அந்நியமானது எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நாம் அதிருப்தி கொண்டிருந்தாலும் கஷ்டமான சூழ்நிலையிலும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக நாம் தொடர்ந்தும் போராட வேண்டும் என அங்கு பேசிய மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வு நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டார்.

குறித்த கருத்தரங்கை சட்டக் கற்கைகளுக்கான தெற்காசிய ஆய்வுநிலையம் ஏற்பாடுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)