Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமரின் ஆட்டம் எதற்காக? – மஹிந்த ராஜபக்ஷ கூறும் தகவல்

In இலங்கை
Updated: 06:57 GMT, Jan 14, 2018 | Published: 06:57 GMT, Jan 14, 2018 |
0 Comments
1220
This post was written by : Puvanes

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டை மட்டுமல்லாது அனைத்து இன மக்களையும் ஏமாற்றிக்கொண்டு வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) கேகாலையில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன கட்சியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுதந்திரக்கட்சியை ஆரம்பகாலங்களில் பண்டாரநாயக்க அரும்பாடுபட்டு வளர்த்தெடுத்தார். அதன் பின்னர் எப்போது சுதந்திரக்கட்சி ரணிலின் காலடிக்கு சென்றதோ அன்றைய தினமே பண்டாரநாயக்க இரண்டாவது தடவையாக கொல்லப்பட்டார் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறிய மஹிந்த, ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களை சாதூரியமாக ஏமாற்றிக்கொண்டு வருகின்றார் எனவும் கூறியுள்ளார்.

குறிப்பாக அண்மையில் பிரதமர் ரணில் நடனமாடிய விடயம் தொடர்பாக தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது உண்மையில் அந்த நடனத்தை பிரதமர் ஆடியதற்கான காரணம் வேறு, மத்திய வங்கி ஊழலை மறைத்துவிட்டோம் என்ற ஆனந்தத்தை வெளிப்படுத்தவே அறிக்கை வெளியாகும் தினத்திற்கு முதல்நாள் ரணில் நடனமாடினார் எனவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

நாம் அனைவரும் தற்போது ரணில் வளைந்து வளைந்து ஆடிய நடனத்தை பற்றி பேசுகின்றோம் ஆனால் அவர் உண்மைகளை மூடிமறைக்கவும், மக்களை திசை திருப்பவுமே நடனம் ஆடியுள்ளார் எனவும் மஹிந்த மேலும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg