Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே ஒரு போட்டி போதும் தவானை வெளியேற்ற: கவாஸ்கர்

In கிாிக்கட்
Updated: 10:24 GMT, Jan 14, 2018 | Published: 07:26 GMT, Jan 14, 2018 |
0 Comments
1604
This post was written by : Anojkiyan

ஒரே ஒரு மோசமான போட்டியே தவானை வெளியேற்ற போதுமானது. அதுவே தற்போது நடந்துள்ளது என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், கிரிக்கெட் வர்ணணையாளருமான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

செஞ்சுரியனில் நடைபெற்றுவரும் தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தவானுக்கு பதிலாக கே.எல். ராகுல் சேர்த்துக் கொள்ளப்பட்டமை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘இந்திய அணியின் பலிகடா எப்பவுமே தவான்தான். ஒரே ஒரு மோசமான போட்டி போதும் அவரை வெளியேற்ற. அதுதான் தற்போது நடந்துள்ளது. ஆனால் கேப்டவுனில் முதல் நாளில் 3 விக்கெட் கைப்பற்றிய புவனேஷ்வர் குமாரை நீக்க அவசியமில்லை. பும்ரா அல்லது ஷமிக்கு பதிலாக இஷாந்தை தேர்வு செய்திருக்கலாம்’ என்று கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg