Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துனீசியாவில் சிக்கன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்: சீர்திருத்தத்துக்கு அறிவிப்பு

In உலகம்
Updated: 07:16 GMT, Jan 14, 2018 | Published: 07:16 GMT, Jan 14, 2018 |
0 Comments
1133
This post was written by : Suganthini

துனீசியாவில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற சிக்கன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, சமூக சீர்திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக, அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த வருட வரவு – செலவுத்திட்டப் பிரச்சினையைச் சமாளிக்கும் வகையில், புதிய வரி விதிப்பு மற்றும் விலை அதிகரிப்புகளுக்கு அரசாங்கம் அறிவித்தது.

அதிகரித்துவரும் அரச கடன் சுமையை குறைத்தல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை திருப்திப்படுத்துதல் ஆகிய செயற்பாடுகள் தொடர்பாக அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள அரசாங்கம், கடந்த முதலாம் திகதியிலிருந்து புதிய வரி விதிப்புகளையும், விலை அதிகரிப்புகளையும் அமுல்படுத்தியுள்ளது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் மக்கள் ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபட்டதுடன், வன்முறை காரணமாக பொதுமக்களும் கைதுசெய்யப்பட்டனர்.

இந்த மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, சிலவற்றில் சமூக சீர்திருத்தங்களை  மேற்கொள்ளவுள்ளதாகவும், இந்நிலையில் மருத்துவ பராமரிப்பு, வீட்டுத்திட்ட வசதி, ஏழைகளுக்கு உதவித்தொகை வழங்குதல் ஆகியவற்றில் சீர்திருத்தம் செய்வதற்கான முன்மொழிவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg