Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடளாவிய ரீதியில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்

In இலங்கை
Updated: 11:02 GMT, Jan 14, 2018 | Published: 07:18 GMT, Jan 14, 2018 |
0 Comments
1218
This post was written by : Risha

உழவர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையை நாட்டின் சகல பாகங்களிலுமுள்ள மக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக தலைநகர் கொழும்பிலுள்ள சகல இந்து ஆலயங்களிலும் பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, மக்கள் தமது வீடுகளிலும் பொங்கல் பொங்கி மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

வடக்கில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை ஆலயங்களிலும் வீடுகளிலும் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கு படைத்து, பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

குறிப்பாக மன்னாரில் இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம்பெற்றதோடு, மன்னார் நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றிலும் பொங்கல் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

அதேபோன்று வவுனியா மாவட்டத்திலும், மக்கள் புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து மிகவும் உற்சாகமாக பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

அத்தோடு, கிளிநொச்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
மேலும், யாழிலும் சகல ஆலயங்களிலும் காலையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, மக்கள் தமது வீடுகளிலும் பொங்கல் பொங்கி கொண்டாடி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

அதேபோன்று கிழக்கில் மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பல பாகங்களிலும் இந்துக்கள் தைத்திருநாளை மிகவும் குதூகலத்துடன் கொண்டாடி வருகின்றனர்.

இதேவேளை மலையகத்தில் குறிப்பாக ஹட்டன், கம்பளை உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியது.

பொங்கல் பண்டிகையானது தென்னிலங்கையில் தமிழர் செறிந்து வாழும் பல பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக புத்தளம் ஸ்ரீ திளெபதியம்மன் ஆலயத்தில் விஷேட பொங்கல் நிகழ்வு நடைபெற்றது.

DSC00653

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg