Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெர்சல் படத்தின் சர்ச்சை வார்த்தைகள் குறித்து மனம் திறந்தார் விஜய்

In சினிமா
Updated: 08:25 GMT, Jan 14, 2018 | Published: 08:25 GMT, Jan 14, 2018 |
0 Comments
1363
This post was written by : Kemasiya

மெர்சல் படத்தில் கூறியுள்ள சர்ச்சையை ஏற்படுத்தும் வார்த்தைகள் தேவையின் பொருட்டு பேசப்பட்டவை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற விகடன் விருது வழங்கும் விழாவில், 2017 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருதை உலக நாயகன் கமலஹாசனிடம் இருந்து பெற்றுக்கொண்ட பின்னர் உரையாற்றிய விஜய் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கூறிய அவர்,

தமிழ் கலாச்சாரத்துக்கு முக்கியதுவம் கொடுத்து நடித்த  படத்திற்கு தமிழர் திருநாளான இன்று விருது வாங்குவதில் ஒரு தமிழனா எனக்கு பெருமை.

சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பிடித்ததால் பிரச்சினைகளை சந்தித்த மெர்சல் படம் வெளியீட்டின் போது ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள்.

சர்ச்சைகள் வரும் என்று எனக்கு தெரியும். அவசியம் கருதியே மெர்சல் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய வசனங்களை பேசினேன்.

மெர்சல் படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு அரசியல் ரீதியாக எதிர்ப்பு வந்த நிலையில்இ எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என கூறியிருந்தார்.

இவருக்கான சிறந்த நடிகர் விருதை உலகநாயகன் கமல்ஹாசன் வழங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg