Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டக்களப்பில் டெங்குவிற்கு பலியான இளம் உயிர்!

In இலங்கை
Updated: 07:42 GMT, Jan 14, 2018 | Published: 07:39 GMT, Jan 14, 2018 |
0 Comments
1072
This post was written by : Risha

தீவிர டெங்கு காய்ச்சல் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த சில தினங்களாக தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுவன் நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

ஏறாவூர் மிச்நகர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் தரம் 7இல் கல்வி கற்கும் என். எம். எம். முஆத் என்ற மாணவனே இவ்வாறு டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg