Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதிபதிகள் விவகாரம்: ஏழு பேர்கொண்ட குழு – இந்திய சட்டத்தரணிகள் சங்கம்

In இந்தியா
Published: 09:54 GMT, Jan 14, 2018 |
0 Comments
1065
This post was written by : Arul Jesu
bar-council_650x400_51452450944

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும், நான்கு நீதிபதிகளுக்கும் இடையில் சமரசத்தை ஏற்படுத்த ஏழு பேர் கொண்ட குழுவை நேற்று (சனிக்ககிழமை) இந்திய சட்டத்தரணிகள் சங்கம் நியமித்துள்ளது.

உச்ச நீதிமன்ற விவகாரம் தொடர்பில் இந்திய சட்டத்தரணிகள் சங்க நிர்வாகிகள் டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்தினர். இதன்போது மன்னன் குமார் மிஸ்ரா தலைமையில் ஏழு பேர் கொண்ட குழு நியமிகக்கப்பட்டது.

நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகோய், மதன் பி லோகுர் ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை, நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை என பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டினர். இதற்கான சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவர் மன்னன் குமார் மிஸ்ரா பத்திரிகையாளரிடம் கூறுகையில்,

‘தலைமை நீதிபதிக்கு எதிராக மூத்த நீதிபதிகள் பகிரங்கமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியது துரதிஷ்டவசமானது. இதனை தவிர்த்திருக்கலாம். இதுபோன்ற விவகாரங்களை பொது அரங்கில் விவாதித்தால் நீதித்துறை, ஜனநாயகம் பாதிப்படையும்.

எனினும் தலைமை நீதிபதி மற்றும் 4 மூத்த நீதிபதிகளிடையே சமரசத்தை ஏற்படுத்த பார் கவுன்சில் சார்பில் 7 பேர் குழுவை நியமித்துள்ளோம். இந்த குழுவினர் வரும் திங்கட்கிழமை முதல் இருதரப்பையும் சந்தித்துப் பேசுவார்கள்.

அத்துடன் உச்ச நீதிமன்ற விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பதை வரவேற்கிறோம்’. என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)