Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரானின் அணு ஒப்பந்தம் தொடர்பாக மக்ரோன் எடுத்துரைப்பு

In ஐரோப்பா
Published: 08:00 GMT, Jan 14, 2018 |
0 Comments
1039
This post was written by : Suganthini
iran

ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் எடுத்துரைத்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்தை பாதுகாக்கும் முக்கியத்துவம் பற்றி பிரான்ஸ் ஜனாதிபதி எடுத்துரைத்ததுடன், ஒப்பந்தத்தை அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டுமெனவும், பிரான்ஸ் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதாகவும், அந்த ஊடகம் நேற்று (சனிக்கிழமை) கூறியுள்ளது.

இதற்கிடையில், ஈரானுக்கு எதிரான பொருளாதாரத்தடைகளை 120 நாட்களுக்குள் நீக்கி, அந்நாட்டுக்கு இறுதி வாய்ப்பாக நிவாரணங்களை வழங்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்பார்த்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளுக்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தித்திட்ட ஒப்பந்தத்தை கடந்த வருடம் அமெரிக்கா முறித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)