Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘புரட்சிப் பாடல்’ தொடர்பாக அங்கஜன் விளக்கம்!

In இலங்கை
Published: 08:51 GMT, Jan 14, 2018 |
0 Comments
1322
This post was written by : Ravivarman
aygajan-ramanathan

தமிழ்த் தலைமைகள் தொடர்ந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருவதனால் தான் ‘நித்திரையா தமிழா.. ‘ எனும் பாடலை ஒலிக்க விட்டோம் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அங்கஜன் இராமநாதன் மேலும் தெரிவிக்கையில்,

“அந்தச் செய்தியை சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் பார்த்தேன். சிரித்தேன். அந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை. அப்படி ஒரு சம்பவமும் நடக்கவில்லை.

அந்த நிகழ்வில் ஒலிக்கவிடப்பட்ட பாடல் தமிழர் எழுச்சிக்கான பாடல். அதை எந்தவிதமான உள்நோக்கத்துடனும் பார்க்க தேவையில்லை. நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்த்தவர்கள்.

அதற்கு ஆதரவு அளிப்பவர்கள் என்பதனால், தமிழர் எனும் உணர்வுகளை, உணர்சிகளை விட வேண்டும் என அவசியமில்லை. தமிழர் என்ற உணர்வு, உணர்ச்சி எப்பவும் இருக்கும்.

தமிழ்த் தலைமைகள் எங்களைத் தொடர்ந்து ஏமாற்றிகொண்டு இருக்கும் போது, நாங்கள் நித்திரையாக இருக்க கூடாது. நித்திரையில் இருந்து எழுந்து வர வேண்டும். அதனால் தான் அந்தப் பாட்டை ஒலிக்க விட்டோம்.  அத்துடன், நாமலின் கேள்விக்கு உரிய நேரத்தில் உரிய இடத்தில் உரிய பதிலை வழங்குவேன்’ என மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் இணையத்தளங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தொலைபேசி ஊடாகக் கடிந்து கொண்டார் என செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)