Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவால்விட்ட பிரதி அமைச்சருக்கு பதிலடி கொடுத்திருக்கிறோம்: ரவூப் ஹக்கீம்!

In இலங்கை
Updated: 09:12 GMT, Jan 14, 2018 | Published: 09:12 GMT, Jan 14, 2018 |
0 Comments
1186
This post was written by : Ravivarman

கோப்பையிலா இங்கு தண்ணீர் கொண்டு வருவார் என்று சவால்விட்ட இங்குள்ள பிரதி அமைச்சருக்கு நாங்கள் சரியான பதிலடியைக் கொடுத்திருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைத் தொகுதியில் ஒட்டகச் சின்னத்தில் (சுயேட்சைக் குழுவில்) போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (சனிக்கிழமை) ஓட்டமாவடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ‘1250 கோடி ரூபா செலவில் ஓட்டமாவடி – வாழைச்சேனை பாரிய குடிநீர் வழங்கல் திட்டத்தை நாங்கள் இவ்வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளோம்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கிடையில் இத்திட்டம் முடிவடையும் வகையில் சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.மீராவோடை பிரதேசத்திலும் ஆற்றங்கரையோரம் பாதுகாப்பு மதில் அமைக்கும் வேலையையும் நாங்கள் பொறுப்பேற்கிறோம்.

தூய குடிநீருக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 350 மில்லியன் ரூபாவுக்கான வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளன.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸின் கைகளில் தந்தால், மீராவோடை பிரதேசத்தில் சந்தை கட்டிடத்தொகுதியை நிர்மாணிக்கும் பணியை நான் முன்னின்று செய்துதருவேன்.

மீராவோடை சந்தியை வியாபார மத்திய நிலையமாக மாற்றுகின்ற தீர்மானத்தை வைத்துக்கொண்டுதான், அதிகாரத்தை எங்களது கைகளில் தந்துபாருங்கள் செய்துகாட்டுகிறோம் என்று கேட்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg