Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பணப்பரிமாற்று இயந்திரத்தில் வெடிப்பு: சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்

In
Published: 09:29 GMT, Jan 14, 2018 |
0 Comments
1143
This post was written by : Suganthini
cash

ஸ்கொட்லாந்தின் Clydebank பகுதியிலுள்ள தன்னியக்கப் பணப் பரிமாற்று இயந்திரமொன்றில் ஏற்பட்டுள்ள வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நாளை (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தவுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளஸ்கோ வீதியில் கடைத்தொகுதிகளுடன் அமைந்துள்ள தன்னியக்கப் பணப்பரிமாற்று இயந்திரமொன்றில் கடந்த வியாழக்கிழமை திடீரென்று வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது காயமடைந்த 51 வயதான ஒருவர், குயீன் எலிஸபெத் பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து, 48 வயதுடைய ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில், சந்தேக நபரை Dumbarton Sheriff நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)