Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்: ஜனாதிபதி

In இலங்கை
Updated: 09:35 GMT, Jan 14, 2018 | Published: 09:35 GMT, Jan 14, 2018 |
0 Comments
1173
This post was written by : Puvanes

சட்டத்தின் பார்வைக்கு அனைவரும் பொதுவானவர்களே அரசியல் கட்சிகள் என்ற பாகுபாடு முக்கியமல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

குருணாகல் பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், சட்டத்தின் செயற்பாடுகள் நேர்மையானதாகவே நடத்தப்படும் எனக் குறிப்பிட்ட அவர் இன்னும் சில தினங்களில் புதிய விசாரணை ஆணைக்குழுவின் மூலமாக ஊழல்கள், மோசடிகள் தொடர்பாக மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயிலும் குற்றவாளிகளை தண்டிப்பதில் கட்சிகளுக்கோ, நிறங்களுக்கோ முக்கியத்துவம் கொடுக்கப்படமாட்டாது எனவும், நீதியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்தகாலத்தில் இடம்பெற்ற மிஹின் லங்கா நிறுவனத்தின் ஊழல்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg