Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் கேரள கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது!

In இலங்கை
Published: 11:10 GMT, Jan 14, 2018 |
0 Comments
1133
This post was written by : Ravivarman

மன்னார், எருக்கலம்பிட்டி பேரூந்து நிலையத்தில் வைத்து கேரள கஞ்சா பொதியுடன் ஒருவரை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா பொதியுடன் நேற்று (சனிக்கிழமை) இரவு அநுராதபுரம் தமுத்தே பிரதேசத்தை சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் நிலைய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் நவரத்தினவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயெ மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் சிரந்த பீரிஸ் இ உதவி பொலிஸ் அத்தியட்சகர் எதிரிசிங்க ஆகியோரின் வழிகாட்டலில் குறித்த கைது இடம்பெற்றுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட 2 கிலோ 55 கிராம் எடை கொண்ட குறித்த கஞ்சாப்பொதி சுமார் 2 இலட்சம் ரூபாய் பெறுமதியானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மன்னாரில் இருந்து அனுராதபுரம் தலாவ என்னும் பிரதேசத்திற்கு கொண்டு செல்ல இருந்த நிலையிலே குறித்த கஞ்சாப்பொதி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், விசாரணைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)