Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துருக்கியில் ஓடுபாதையை விட்டு விலகிச்சென்ற விமானம்

In
Published: 10:23 GMT, Jan 14, 2018 |
0 Comments
1771
This post was written by : Suganthini

துருக்கியின் ட்ரப்சோன் (Trabzon) விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்க முற்பட்ட விமானமொன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றதால், அவ்விமான நிலையம் சிறிதுநேரம் மூடப்பட்டதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துருக்கியின் தலைநகரான அங்காரா விமான நிலையத்திலிருந்து நேற்று (சனிக்கிழமை) இரவு புறப்பட்ட 737 -800 எனும் இலக்கமுடைய விமானம், ட்ரப்சோன் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, திடீரென்று ஓடுபாதையை விட்டு விலகிச்சென்று, கருங்கடலில் விழ முற்பட்டுள்ளது.

இருப்பினும், அவ்விமானம் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், மேற்படி விமானத்தில் பயணித்த 162 பயணிகளும் விமானியும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக, அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தச் அசம்பாவிதத்தைத் தொடர்ந்து, மேற்படி விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக  ரத்துச் செய்யப்பட்டதுடன், விமான நிலையமும் சிறிதுநேரம் மூடப்பட்டதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)