Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வதேசத்தை ஏமாற்றவே பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி!

In இலங்கை
Published: 11:11 GMT, Jan 14, 2018 |
0 Comments
1230
This post was written by : Ravivarman
Seenithambi Yoheswaran

சர்வதேசத்தை ஏமாற்றவே மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் அலுவலகத்தை நேற்று (சனிக்கிழமை) மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘போராளிகளாக இருந்து தங்களுடன் இணைந்தவர்களை ஆட்சியாளர்களாக நியமித்துள்ளோம் என சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

2008 ஆம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததன் காரணமாக தமிழன் ஒருவன் முதலமைச்சராக வரவேண்டும் என்ற நோக்கத்திற்காக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட பிள்ளையானுக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வாக்களித்தார்கள்.

இத்தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மாற்றத்திற்காக மைத்திரிபால சிரிசேனவிற்கு வாக்களித்தோம்.

அதை வைத்துக் கொண்டு இந்தத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தமிழ் மக்களின் வாக்குகளை எதிர்பார்க்க முடியாது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் தமிழ் மக்கள். ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியுடடையவராக இருக்க வேண்டும்.

இந்த மண்ணிலே எமது இனம் சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்திற்காக போராடிய தமது உயிர்களைத் தியாகம் செய்தார்கள்.

இதனால் பல சொத்துக்களையும் இழந்தோம் என்பதைச் சற்றுச் சிந்திக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)