Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியப் பிரதமரின் பொங்கல் வாழ்த்து

In
Updated: 10:41 GMT, Jan 14, 2018 | Published: 10:41 GMT, Jan 14, 2018 |
0 Comments
1325
This post was written by : Suganthini

பிரித்தானியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்வதில் தமிழர்கள் சிறந்த எடுத்துக்காட்டென்பதுடன், தமிழ்ச் சமூகத்தால் தாம் பெருமை கொள்வதாகவும், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

உலகம் பூராகவுமுள்ள இந்துக்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தைப்பொங்கலை கொண்டாடிவரும் நிலையில், விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘பிரித்தானியா பல்வேறு வழிகளிலும் முன்னேற்றப் பாதையில் திகழ்கின்றமைக்கு  தமிழ்ச் சமூகத்தினர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர். அவர்களால், நாங்கள் பெருமையடைகின்றோம். உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள், தைப்பொங்கலை மிக உற்சாகத்துடன் கொண்டாட எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg