Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தென்னிலங்கை அரசியலில் பரபரப்பு! – ஜனாதிபதியின் இரகசியத் திட்டம் என்ன?

In இலங்கை
Updated: 10:53 GMT, Jan 14, 2018 | Published: 10:53 GMT, Jan 14, 2018 |
0 Comments
1733
This post was written by : Puvanes

ஐக்கியதேசிய கட்சியில் அங்கத்துவம் வகித்துவரும் முக்கிய அமைச்சரவை அமைச்சர் ஒருவர் எதிர்வரும் சில தினங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தூண்டுதலின்பேரிலேயே சுதந்திரக்கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கட்சிதாவலில் ஈடுபடவுள்ள அமைச்சர் ஏற்கனவே சுதந்திரக்கட்சியில் அங்கம் வகித்தவர் எனவும், அதன் பின்னர் ஐக்கியதேசிய கட்சிக்கு மாறியவர் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள சுதந்திரக்கட்சியின் பொதுக்கூட்டத்தின்போது இந்த கட்சிச்தாவல் இடம்பெறவுள்ளதாகவும் கொழும்பு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் ஜனாதிபதி பிரதமரை பதவி விலக்கி புதிய பிரதமரை நியமிக்கவுள்ளதாகவும், ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சுதந்திரக்கட்சியில் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் ஐக்கியதேசிய கட்சியில் உள்ள முக்கிய அமைச்சர் ஒருவர் கட்சித்தாவலில் ஈடுபடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதால் தென்னிலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, ஜனாதிபதி இரகசியத் திட்டங்களை மேற்கொண்டுள்ளாரா என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg