Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசியக் கட்சிகள் தமிழ் மக்களை வைத்தே அரசியல் செய்தன: ஸ்ரீநேசன்!

In இலங்கை
Updated: 12:45 GMT, Jan 14, 2018 | Published: 14:20 GMT, Jan 14, 2018 |
0 Comments
1144
This post was written by : Ravivarman

மாறிமாறி ஆட்சிக்கு வந்த தேசியக் கட்சிகள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருவதாகக் கூறி ஏமாற்றியே அரசியல் செய்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வந்தாறுமூலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் அலுவலகத்தை நேற்று (சனிக்கிழமை) மாலை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,”அரசியல் தேவைக்காக சிறுபான்மை மக்களைப் பகடைக்காய்களாக மாற்றி சூதாட்ட அரசியல் செய்தவர்கள் எமது மக்களிடம் வந்து வாக்குகளை கேட்பதற்கு யோக்கியதையற்றவர்கள்.

இந்தத் தேர்தலில் படகில் வருபவர்கள் கடந்த காலங்களில் பல வேட்டுக்களைத் தீர்த்தவர்கள். சர்வதேசமே வியந்து பார்க்கக்கூடிய ஒழுக்கமான கட்டுக்கோப்பான விடுதலைப் போராட்டதை மௌனிக்கச் செய்வதற்கு துணை நின்றவர்கள்.

இவர்கள் தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பதற்கு யோக்கியதையற்றவர்கள். இவர்கள் பின் செல்பவர்கள் பகுத்தறிவு இல்லாதவர்களே.

கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடாது என்பதற்காக புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகள் என பலரையும் படுகொலை செய்தவர்கள்.

தவிச்ச முயல் அடிப்பது போல் தமிழத் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத தேர்தல்களில் போட்டியிட்டுத் தற்காலிக வெற்றியைப் பெற்றவர்கள் தற்போது அதே கனவுடன் வருகிறார்கள்.

இவர்களுக்கு மக்கள் இம்முறை சரியான பாடம் புகட்ட வேண்டும். மக்களின் உரிமையையும் அபிவிருத்தியும் ஒன்றாக மேற்கொள்ள வேண்டும் எனச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மக்கள் தங்களது ஆணையை வழங்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

DSC_0595

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg