Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இருவேறு விபத்துக்களில் 8 பேர் பலி!

In இந்தியா
Updated: 12:39 GMT, Jan 14, 2018 | Published: 12:11 GMT, Jan 14, 2018 |
0 Comments
1043
This post was written by : Arul Jesu
road-accident-e1433562417751

கிருஸ்ணகிரி, ஓசூர் அருகே உள்ள சூளகிரியில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரச பேருந்துடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் காயமடைந்துள்ளனர்.

சென்னையிலிருந்து பெங்களுர் நோக்கிச் சென்ற கார் சூளகிரி அருகே சென்றுகொண்டிருந்த வேளை காரின் டயர் வெடித்த போது, கட்டுப்பாட்டை இழந்து அரச பேரூந்துடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த ஐந்து பேரும் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளனர். மேலும், பேரூந்தில் பயணம் செய்தவர்களில் சிலர் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மற்றுமொரு விபத்தில் 3பேர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி, கோவில்பட்டி அருகே கழுகுமலை பகுதியில் காருடன் முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்துக்கள் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)