Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதலாவது போட்டி வெற்றி: ஒருநாள் தொடரில் சாதிக்குமா இங்கிலாந்து?

In கிாிக்கட்
Updated: 11:40 GMT, Jan 14, 2018 | Published: 11:39 GMT, Jan 14, 2018 |
0 Comments
1127
icon_com
This post was written by : Risha
201801141255453587_1_ausvseng-1stinnings1._L_styvpf

அவுஸ்ரேலியாவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

அவுஸ்ரேலியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடரில் விளையாடியிருந்தது. இதனை தொடர்ந்து முதலாவது ஒருநாள் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியது.

இதில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 304 ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்ரேலிய அணி சார்பில் துடுப்பாட்டாத்தில் அதிகபட்டசமாக ஆரோன் ஃபிஞ்ச் சதம் கடந்து 107 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 60 ஓட்டங்களையும், மிட்சல் மார்ஷ் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் லியாம் பிளன்கெட் 3 விக்கெட்டுகளையும், ஆதில் ராஷிட் 2 விக்கெட்டுகளையும், வோக்ஸ், வூட் மற்றும் அலி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 305 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் வெறும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு வெற்றி இலக்கை கடந்த 308 ஓட்டங்களை பெற்று வெற்றியை தனதாக்கியது.

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேசன் றோய் 180 ஓட்டங்களையும், ஜோ ரூட் 91 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு பலம் சேர்த்திருந்தனர்.

அவுஸ்ரேலிய சுற்றுப்பயணத்தின் போதான இங்கிலாந்திற்கு எதிரான ஆஷஸ் தொடரை அவுஸ்ரேலியா 4-0 என கைப்பற்றியிருந்த நிலையில், ஒருநாள் தொடரை இங்கிலாந்து தனக்கு சாதமாக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது.

4000

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)