Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புத்தளத்தில் மற்றுமொரு யானை உயிரிழப்பு!

In இலங்கை
Published: 12:06 GMT, Jan 14, 2018 |
0 Comments
1172
This post was written by : Ravivarman
DSC03440

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடிப் பிரதேசத்தில் கொம்பு யானை உயிரிழந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ‘அதிகாலை கல்லடி பிரதேசத்தில் அப்பிரதேசவாசி ஒருவரது காணியினுள் இவ்வாறு இந்த யானை உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளது.

இந்த யானையின் உயிரிழப்புக்கு துப்பாக்கிச் சூடு காரணமல்ல என்றும் அனேகமாக மின்சாரம் தாக்கியே இந்த யானை உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இந்த யானையின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதை வனவிலங்கு திணைக்கள மிருக வைத்தியர்களின் மரண விசாரணைகளின் பின்னரே தெரிந்து கொள்ள முடியும் என்றும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தனது காணியைச் சுற்றி முன்னர் மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்த போதிலும் அது கடந்த ஒரு மாதமாக செயலற்றிருந்ததாக குறித்த காணியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

எனினும் தனது காணியினுள் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பது தொடர்பில் அயலவர்கள் கூறியதையடுத்தே தான் தெரிந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை ஏற்கனவே கடந்த டிசம்பர் 9 ஆம் திகதி கல்லடி செல்லங்கண்டல் வனத்தினுள் ஒற்றைக் கொம்பன் யானை எனப் பெயர் பெற்றிருந்த யானை ஒன்றும் உயிரிழந்திருந்தது.

இது ஒரு மாத காலப்பகுதியினுள் கல்லடி பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டாவது யானையின் உயிரிழப்பாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

DSC03454 DSC03441

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)