Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மதுபான வர்த்தமானி அறிவிப்பு ரத்து செய்யப்படும்: ஜனாதிபதி

In இலங்கை
Published: 12:40 GMT, Jan 14, 2018 |
0 Comments
1274
This post was written by : Puvanes
drink001

அண்மையில் மதுபானம் தொடர்பாக வெளியான வர்த்தமானி அறிவிப்பினை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

அஹலவத்தையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியான வர்த்தமானி அறிவிப்பு நாளை (திங்கற்கிழமை) தொடக்கம் ரத்து செய்யப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

பெண்கள் மதுபானங்களை கொள்வனவு செய்வதற்கும், பெண்கள் மதுபான உற்பத்தி நிலையங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் பணியாற்றுவதற்கும், இரவு 10 மணிவரையிலும் மதுபான விற்பனை நிலையங்கள் திறந்துவைக்கப்படவும் அனுமதி அளித்து வர்த்தமானி அறிவிப்பு வெளிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் ஜனாதிபதி குறித்த வர்த்தமானி அறிவிப்பை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)