Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையின் பொருளாதாரம் 5 வீதத்தால் அதிகரிக்கும் வாய்ப்பு!

In இலங்கை
Published: 13:02 GMT, Jan 14, 2018 |
0 Comments
1179
This post was written by : Ravivarman
aads

2018 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதத்தால் அதிகரிக்கும் என உலக வங்கி வெளியிட்டுள்ள பொருளாதார கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் தெற்காசியா 6.9% வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளதுடன், நுகர்வு வலுவாக இருக்கும் அதேவேளை முதலீடுகள் நல்ல நிலையில் இருக்கும் எனவும் குறித்த கணிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், 2018 – 2019 ஆம் ஆண்டுகளில் 7.3% வளர்ச்சியை இந்தியா அடையலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன், அவ்வளர்ச்சி 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் 7.5% ஆக உயரலாம் எனவும் குறித்த கணிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த காலப்பகுதியில் தனியார் துறையின் பொருட்கள் மற்றும் சேவைகளைக் குத்தகைக்கு விடுவதன் மூலம் தனியார்துறை முதலீட்டு வருமானத்தை அதிகரிக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இப்பிராந்தியத்தில் இந்தியாவைத் தவிர்ந்த ஏனைய நாடுகள் 2018 ஆம் ஆண்டில் 5.8% ஆகவும் 2019 ஆம் ஆண்டில் 5.9% ஆகவும் வளர்ச்சியடையலாம் என்பதுடன், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் 5.8% ஆலும், பங்களாதேஷ் 6.7% ஆலும் வளர்சியடையும் எனக் குறிப்பிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் வலுவான தனிப்பட்ட நுகர்வு மற்றும் முதலீட்டு வளர்ச்சியை அடையும் இலங்கை, 5% வளர்ச்சி வேகத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக குறித்த கணிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)