Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஐந்து மணியுடன் நிறைவு

In இந்தியா
Updated: 13:10 GMT, Jan 14, 2018 | Published: 13:10 GMT, Jan 14, 2018 |
0 Comments
1094
This post was written by : Arul Jesu

மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஐந்து மணியுடன் நிறைவுபெற்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மதுரை அவனியாபுரத்தில் இடம்பெற்றது.

இந்த ஜல்லிக்கட்டை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிலையில் 954 காளைகள் களமிளங்குவதற்கு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஐந்து மணியுடன் நிறைவுபெற்ற இந்த நிகழ்ச்சியில் 400 காளைகள் களமிறங்கியதுடன், 479 வீரர்கள் மட்டுமே இதில் பங்குபற்றினர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg