Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தான் இராணுவத் தளபதி இலங்கை விஜயம்!

In இலங்கை
Updated: 14:01 GMT, Jan 14, 2018 | Published: 14:30 GMT, Jan 14, 2018 |
0 Comments
1120
icon_com
This post was written by : Ravivarman
qamar-javaid-bajwa-1700-26-11-640x459

பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜவீட் பஜ்வா, இலங்கை இராணுவத் தளபதியின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தான் தூதுவராலயம் அறிவித்துள்ளது.

நாளை (திங்கட்கிழமை) இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி எதிர்வரும் 17 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஜெனரல் பாஜ்வா, பாதுகாப்பு மற்றும் தொழில்சார் நலன்கள் குறித்து இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவுடன் கலந்துரையாடல்களை நடத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட இராணுவ உயர் அதிகாரிகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்ளும் இவர் பிராந்திய பாதுகாப்பு மற்றும் பரஸ்பர வட்டி தொடர்பான விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், பாகிஸ்தான் இராணுவக் கல்லூரி மற்றும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பணியாற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ள இலங்கை இராணுவ அதிகாரிகளுடனும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)