Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பபுவா நியூகினியாவை பந்தாடி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது இந்தியா

In கிாிக்கட்
Updated: 05:31 GMT, Jan 16, 2018 | Published: 05:31 GMT, Jan 16, 2018 |
0 Comments
1328
This post was written by : Varothayan

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் பபுவா நியூகினியாவை பந்தாடி இரண்டாவது வெற்றியை இந்தியா இன்று பதிவு செய்துள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் இடம்பெற்று வருகின்றது. இதன் முதல் சுற்று லீக் போட்டிகள் தற்சமயம் இடம்பெற்று வருகின்றன.

இன்று பே ஓவலில் இடம்பெற்ற 11 ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பபுவா நியூகினியா அணிகள் மோதின. நாணயற்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய பபுவா நியூகினியா அணி 21.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 64 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தியாவின் அனுகுல் ரோய் 6.5 ஓவர்கள் பந்து வீசி, 14 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

இலகுவான இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 8 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

இந்தியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பிரித்வி ஷா 39 பந்துவீச்சுக்களில் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களை அணிக்காகப் பெற்றுக்கொடுத்தார்.

ஆட்டநாயகனாக அனுகுல் ரோய் தெரிவானார்.

தொடரில் அவுஸ்ரேலிய அணிக்கெதிராக அதிரடி வெற்றி பெற்றிருந்த இந்தியாவிற்கு இது இரண்டாவது வெற்றியாகும்.

அதேவேளை, சிம்பாவே அணியுடனும் மோசமாக விளையாடிய பபுவா நியூகினியா இப்போட்டியிலும் சோபிக்கத்தவறி இருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg