Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொலம்பியாவில் பாலம் உடைந்து வீழ்ந்தது: 10 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 06:12 GMT, Jan 16, 2018 | Published: 06:12 GMT, Jan 16, 2018 |
0 Comments
1247
This post was written by : Suganthini

கொலம்பியாவின் தலைநகர் போகோடாவில் (Bogota) பாலமொன்று உடைந்து வீழ்ந்ததில், கட்டுமானத் தொழிலாளர்கள் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு தேசிய உட்கட்டமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இடிபாடுகளில் சுமார் 11 பேர் சிக்கி காணாமல் போயுள்ள நிலையில், மீட்புப் பணி தொடர்கின்றது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடுமெனவும், அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்தப் பாலத்தில் வடிகாலமைப்புப் பணி நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே, திடீரெனப் பாலம் உடைந்து வீழ்ந்துள்ளது.

சம்பவத்தில் இடத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர்.

446 மீற்றர் நீளமான இந்தப் பாலம், கடந்த மார்ச் மாதம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg