Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா ஆசிரியர்களை இலக்குவைத்து கொள்ளை முயற்சி!

In இலங்கை
Updated: 06:36 GMT, Jan 16, 2018 | Published: 06:11 GMT, Jan 16, 2018 |
0 Comments
1122
This post was written by : Risha

வவுனியாவில் கடமையாற்றும் பாடசாலை ஆசிரியர்களிடம் வட மாகாண திட்டமிடல் கிளையில் இருந்து தொடர்புகொள்வதாக கூறி பணம் பறித்துவரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா பிரபல பாடசாலைக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பை ஏற்படுத்திய வடமாகாண திட்டமிடல் கிளையில் பணியாற்றும் என்.எஸ்.கிரிசாந்தன் என தன்னை அடையாளப்படுத்திய நபர், அப்பாடசாலையில் கடமையாற்றும் கணவனை இழந்த ஆசிரியைகளின் விபரங்களை கோரியுள்ளார்.

பாடசாலை பிரதி அதிபரும் தமது பாடசாலையில் கற்பிக்கும் கணவனை இழந்த ஆசிரியைகள் இருவரின் விபரங்களை வழங்கியுள்ளார்.

அதற்கமைய குறித்த நபர் சம்பந்தப்பட்ட ஆசரியர்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி வடமாகாண திட்டமிடல் கிளையினால் 7 இலட்சம் ரூபா தங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அதனை பெறுவதற்கு சனிக்கிழமை 10 மணிக்கு 56 ஆயிரம் ரூபா பணத்துடன் மாகாண அலுவலகத்திற்கு வருமாறும் தெரிவித்துள்ளார்.

எனினும் குறித்த ஆசிரியர்கள் சுதாகரித்து பாடசாலை அதிபருடன் தொடர்புகொண்டு கேட்டபோது அவ்வாறு ஒரு நடைமுறை இருக்குமானால் வடமகாhணசபை எழுத்து மூலம் அறிவிக்கும் எனவும் பணத்தினை கொண்டு செல்வேண்டாம் எனவும் அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை மாகாண திட்டமிடல் கிளைக்கு தொடர்பை ஏற்படுத்திய அதிபர் குறித்த சம்பவம் தொடர்பாக தெரிவித்தபோது அவ்வாறான நபரொருவர் தமது திணைக்களத்தில் இல்லை எனவும் அது போலியான தகவல் என்றும் கூறியுள்ளனர்.

எனவே இவ்விடயம் தொடர்பாக பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டிய தேவையேற்பட்டுள்ளதாக குறித்த பாடசாலை ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg