Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

“ஒரு நிமிசம் தலை சுத்திரிச்சு” ரஜினியின் வசனத்தில் பாடல் வெளியானது

In சினிமா
Updated: 06:31 GMT, Jan 16, 2018 | Published: 06:28 GMT, Jan 16, 2018 |
0 Comments
1173
This post was written by : Arul Jesu

ரஜினிகாந்த் பேசிய “ஒரு நிமிசம் தலை சுத்திரிச்சு ” என்ற வசனத்துடன் ஆரம்பித்துள்ள பாடல் ஒன்றை “தாதா 87“ படக்குழு  நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பொங்கல் தினத்தன்று வெளியிட்டது.

“தாதா 87” படத்தின் விளம்பரப்பாடலாக அமைந்துள்ள “ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு“ பாடலின் வரிகளை இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி எழுதியுள்ளார். வி.எம்.மகாலிங்கம் இப்பாடலை பாடியுள்ளார்.

அண்மையில் தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், பத்திரிரையாளர்கள் தன்னிடம் உங்கள் கொள்கை என்ன எனக்கேட்டபோது “ஒரு நிமிசம் தலை சுத்திரிச்சு” என்று தனது ரசிகர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து இந்த வசனத்தை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பிரபல்யமாக்கினார்கள். இந்த வசனத்தை வைத்து சாருஹாசன் நடிக்கும் ‘தாதா 87’ படத்தின் பாடல் வரிகளை உருவாக்கி இருக்கிறார்கள்.

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் உருவாகிவரும் ‘தாதா 87’ படத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் மற்றும் பலர் நடிக்கின்றார்கள். கலை சினிமாஸ் நிறுவனம் இந்தப்படத்தைத் தயாரிக்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg