Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தோனேஷிய நூலகத்தில் தீ: அரிய கலைப்பொருட்கள் தீக்கிரை

In
Updated: 07:23 GMT, Jan 16, 2018 | Published: 07:23 GMT, Jan 16, 2018 |
0 Comments
1159
This post was written by : Suganthini

இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகர்த்தாவிலுள்ள பாரம்பரிய கடல்சார் நூலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) திடீரென்று தீ பரவியதன் காரணமாக, அந்நூலத்திலிருந்த அரிய கலைப்பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

கடல் சார்ந்த வரலாற்று நூல் மற்றும் அரிய கலைப்பொருட்களும் தீக்கிரையாகியுள்ளன.

மேற்படி நூலகத்தில் தீ பரவ முற்பட்டபோது, அந்நூலக ஊழியர்களும் பார்வையாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதால், அனைவரும் எந்தவித ஆபத்தின்றி தப்பியுள்ளதாக, தீயணைப்புப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

நூலகத்தில் பரவிய தீயைத் தொடர்ந்து, நூலகக் கட்டடத்தில் பாரிய கரும்புகை படிந்து காணப்படுவதாகவும், அவர்கள் கூறியுள்ளனர்.

தீயணைப்புப் படையினரின் உதவியுடன் தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலையில், நூலகத்தில் தீ பரவியமைக்கான விசாரணையைப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg