Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அபிவிருத்தியை காண மஹிந்தவின் கட்சிக்கு ஆதரவளியுங்கள்: கீதாஞ்சலி

In இலங்கை
Updated: 07:33 GMT, Jan 16, 2018 | Published: 07:32 GMT, Jan 16, 2018 |
0 Comments
1118
This post was written by : Risha

அபிவிருத்தியை காண வேண்டுமாயின், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன-க்கு ஆதரவளியுங்கள் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இணைப்பாளர் கீதாஞ்சலி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் அலுவலகம், வடமேல் மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் இணைப்பாளர் கீதாஞ்சலி ஆகியோரினால் திறந்து வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உரையாற்றிய கட்சியின் இணைப்பாளர், ”எமது கட்சியின் தலைவரின் காலத்தில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது எதுவுமே நடக்கவில்லை.

நீங்கள் அபிவிருத்தியை காண வேண்டுமானால் மீண்டும் எமது கட்சியை ஆதரிக்க வேண்டும். பல்வேறு வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் நாம் வேலைவாய்ப்புக்களை வழங்கியிருந்தோம்.

எனவே அந்த நன்றியை எமது மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். மீண்டும் எமது கட்சியை ஆதரித்தால் அதிகளவான அபிவிருத்தியை நாம் இங்கு கொண்டு வருவோம்” எனக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg