Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பார்தீவ் பட்டேல் மோசமான களத்தடுப்பு: டெஸ்ட் அணிக்குள் வருகிறார் தினேஷ் கார்த்திக்

In கிாிக்கட்
Updated: 07:49 GMT, Jan 16, 2018 | Published: 07:49 GMT, Jan 16, 2018 |
0 Comments
1966
This post was written by : Varothayan

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சோபிக்கத்தவறி வரும் இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் பார்தீவ் பட்டேலுக்கு பதிலாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை களமிறக்க இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்திய டெஸ்ட் அணியின் வழமையான விக்கெட் காப்பாளர் சகா, காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக சென்சூரியன் டெஸ்ட்டில் பார்தீவ் பட்டேல் சேர்க்கப்பட்டார்.

ஆனால், அவரோ முதல் இன்னிங்ஸில் வெறும் 19 ஓட்டங்களைப் பெற்றதுடன், களத்தடுப்பில் பல முக்கிய பிடியெடுப்புக்களை தவற விட்டிருந்தார். போட்டியை வெல்ல, இது இந்திய அணிக்கு பாரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

எனவே, அண்மைய காலமாக உள்ளுர் போட்டிகளில் பிரகாசித்துவரும் தினேஷ் கார்த்திக்கை மூன்றாவது போட்டிக்காக அணியில் உள்ளீர்க்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. கார்த்திக், பங்களாதேஷ் அணிக்கு எதிராக கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் டெஸ்ட் போட்டியில் விளையாடியிருந்தார்.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் போட்டிகளில் இந்திய அணிக்காக உள்ளீர்க்கப்பட்டிருக்கும் தினேஷ் கார்த்திக், ஆறு போட்டிகள் கொண்ட தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும் பெயரிடப்பட்டிருந்தார். இந்நிலையில், அதற்கு முன்பதாகவே, அவர் அணியுடன் இணையவுள்ளார்.

டோனியின் வரவால், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் காலங்களை வீணாக இழந்த இந்திய அணியின் விக்கெட் காப்பாளர்களான பார்தீவ் பட்டேல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் மீண்டும் அணிக்குள் தற்போது உள்ளீர்க்கப்பட்டுள்ளனர்.

எனவே, அவர்கள் கிடைக்கும் வாய்ப்புக்களை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல், அணியில் இருந்து ஒதுக்கப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg