Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால், மரின் சிலிச் வெற்றி

In டெனிஸ்
Updated: 08:21 GMT, Jan 16, 2018 | Published: 08:21 GMT, Jan 16, 2018 |
0 Comments
1201
This post was written by : Varothayan

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் முதன் நிலை வீரர் ஸ்பெயின் ரபெல் நடால் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போர்னில் நேற்று தொடங்கியது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-1, 6-1, 6-1 என்ற நேர்செட்டில் டொமினிகன் குடியரசு வீரர் விக்டர் எஸ்ட்ரெல்லாவை எளிதில் தோற்கடித்து 2 ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

முழங்கால் காயத்தில் இருந்து மீண்டு வந்த 37 வயதான ரபெல் நடால் வெற்றியுடன் தொடரைத் தொடங்கி இருக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்ட் 6-7 (4-7), 6-3, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 11 ஆம் நிலை வீர கெவின் ஆண்டர்சனையும் (தென்ஆப்பிரிக்கா) சாய்த்து அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்ற ஆட்டங்களில் டிமிட்ரோவ் (பல்கேரியா), நிக் கிர்ஜியோஸ் (அவுஸ்ரேலியா), மரின் சிலிச் (குரோஷியா), மேத்யூ எப்டென் (அவுஸ்ரேலியா), சோங்கா (பிரான்ஸ்), டெனிஸ் ஷபோவலோவ் (கனடா), யுய்சி சுஜித் (ஜப்பான்), ஜான் மில்மன் (அவுஸ்ரேலியா), யோஷிஹிடோ நிஷிர்கா (ஜப்பான்), விக்டோர் டிரிச்கி (செர்பியா), ருபென் பெமல்மான்ஸ் (பெல்ஜியம்), பாப்லோ காமேன் பஸ்டா (ஸ்பெயின்), ஜிலெஸ் முல்லர் (லக்சம்பர்க்), மெக்கன்சி மெக்டொனால்டு (அமெரிக்கா), லினார்டோ மேயர் (அர்ஜென்டினா), டெனிஸ் இஸ்டோமின் (உஸ்பெகிஸ்தான்), ஜிலெஸ் சிமோன் (பிரான்ஸ்) ஆகியோர் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg