Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிரிக்கெட் போட்டியைக் காணவந்த ரசிகருக்கு அடித்தது அதிஷ்டம்!

In கிாிக்கட்
Updated: 10:38 GMT, Jan 17, 2018 | Published: 09:43 GMT, Jan 16, 2018 |
0 Comments
1721
This post was written by : Varothayan

பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியைக் காணவந்த நியூசிலாந்து ரசிகருக்கு 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசாகக் கிடைத்துள்ளன.

குறித்த போட்டியில் அடிக்கப்படும் சிக்ஸர்களை ஒரு கையால் பிடிக்கும் ரசிகருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும் என தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்திருந்தது. கடந்த வருடங்களிலும் இவ்வாறான போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கமைய மூன்றாவது போட்டியில் பாகிஸ்தான் வீரர் முஹம்மட் அமீர் வீசிய பந்தை, நியூசிலாந்து வீரர் மார்டின் குப்டில் சிக்ஸருக்கு விளாசினார். இதனை, அரங்கில் அமர்ந்திருந்த கிரேக் டொகார்ட்டி என்ற ரசிகர் ஒரு கையால் பிடித்தார். அவருக்கு பரிசுத்தொகை கிடைத்தது.

பரிசு பெற்ற டொகார்ட்டி தெரிவிக்கையில், கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் வாரத்தில் எல்லைக்கோட்டருகே இரண்டு கைகளால் ஒரு பிடியெடுப்பை தவறவிட்டேன். அப்போது நண்பர்கள் கேலி செய்தார்கள். அதிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை. இப்பொழுது பிடியெடுத்திருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. அற்புதமான தருணம் இது – என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg