Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற்: ஸ்கொட்லாந்தின் பொருளாதாரத்தில் பாதிப்பு!

In
Updated: 09:48 GMT, Jan 16, 2018 | Published: 09:48 GMT, Jan 16, 2018 |
0 Comments
1153
This post was written by : Suganthini

பிரெக்சிற் காரணமாக எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில், ஸ்கொட்லாந்தில் 8.5 சதவீதமான பொருளாதாரப் பாதிப்பு ஏற்படுமென, ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தின் பொருளாதாரத் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டு வைத்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்தவித வர்த்தக ஒப்பந்தமும் செய்துகொள்ளாமல் பிரித்தானியா வெளியேறினால், ஸ்கொட்லாந்தின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்றார்.

‘எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் ஸ்கொட்லாந்தின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்படுமென்பதுடன், இதன் தாக்கம் 8.5 சதவீதமாகக் காணப்படும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg