Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிராண்ட்ஹோம் அதிரடி: 4ஆவது போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து

In கிாிக்கட்
Updated: 10:12 GMT, Jan 16, 2018 | Published: 10:12 GMT, Jan 16, 2018 |
0 Comments
1264
This post was written by : Varothayan

நியூசிலாந்தின் சகலதுறை வீரர் கிராண்ட்ஹோமின் அதிரடியால் பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கி ஆட்டநாயகன் விருதை வென்ற கிராண்ட்ஹோம், 40 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 74 ஓட்டங்களைக் குவித்திருந்தார்.

ஏற்கனவே, முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்த பாகிஸ்தான் அணி, இன்று ஹமில்டனில் இடம்பெற்ற நான்காவது போட்டியில் நாணயற்சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தது.

130 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்த பாகிஸ்தான் அணி, ஹபீஸ் மற்றும் அணித்தலைவர் சப்ராஸின் அரைச்சதங்களின் துணையுடன் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 154 ஓட்டங்களுக்கு 5 முக்கிய விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த நிக்கலஸ் மற்றும் கிராண்ட்ஹோம் ஆகியோர் நிதானமாகவும், அதிரடியாகவும் விளையாடி 25 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றி இலக்கை அடைந்தனர்.

இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், நியூசிலாந்து 4 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg