Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பென் ஸ்டோக்ஸ் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில் சிக்கல்?

In கிாிக்கட்
Updated: 10:45 GMT, Jan 16, 2018 | Published: 10:45 GMT, Jan 16, 2018 |
0 Comments
1189
This post was written by : Varothayan

கடந்த செப்டெம்பர் மாதம் இரவு விடுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளதால், அவர் எதிர்வரும் ஐ.பி.எல். தொடரில் பங்கேற்பதில் சிக்கல் நிலவியுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தினால், அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், ஒரு நாள் அணிக்குள் சேர்க்கப்பட்டார். இருந்த போதும் நேற்று முன்தினம் மெல்பேர்னில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் அவர் விளையாடும் பதினொருவர் அணிக்குள் இடம்பெறவில்லை.

இந்நிலையில், வீதிச்சண்டையில் ஈடுபட்டதற்காக பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட மூவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 27, 28 ஆம் திகதிகளில் ஐ.பி.எல். ஏலம் இடம்பெறவுள்ளது. இதற்கான தேர்வுப்பட்டியலில் ஸ்டோக்ஸூம் இடம்பெற்றுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், ஐ.பி.எல். தொடரில் கலந்து கொள்வது சந்தேகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg