Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா டெங்கு சிவப்பு வலயத்திலிருந்து 70 பேர் சிகிச்சை!

In இலங்கை
Updated: 12:39 GMT, Jan 16, 2018 | Published: 12:39 GMT, Jan 16, 2018 |
0 Comments
1098
This post was written by : Arul Jesu

“டெங்கு சிவப்பு வலய” பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வவுனியா கற்குழி மற்றும் நெளுக்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த  16 நாட்களில் 70 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி கு. அகிலேந்திரன்  தெரிவித்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா வைத்தியசாலையில்,  ஊடகவியலாளர் கேட்டகேள்விக்குப் பதிலிளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வவுனியாவின் கற்குழி, நெளுக்குளம் மற்றும் செட்டிக்குளத்தின் சில பகுதிகள் “டெங்கு சிவப்பு வலயமாக“ அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்த ஆண்டு ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலும் 70பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

இது குறித்து வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் கு. அகிலேந்திரன் தெரிவிக்கையில்,

2018ஆம் ஆண்டில் டெங்கு சிவப்பு வலயத்தில் 16 நாட்களில் எழுபது பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் கூடுதலானவர்கள் கொழும்பு உட்பட வெளி மாவட்டங்களிற்கு சென்று வருபவர்களாகவே இருக்கின்றனர்.  இதே போல்  இரண்டு வாரத்திற்கு முன்னரும் டெங்கு நோயின் தாக்கத்தில் ஒருவர் மரணமடைந்திருந்தார்.

எனவே வவுனியா மற்றும் ஏனைய மாவட்டங்களிற்கு செல்லும்போது டெங்கு தாக்கம் அதிகமுள்ள பகுதிகள் என வைத்தியர்கள் சந்தேகம் வெளியிடும்போது அதற்கான உரிய அவதானத்தை எடுக்கவேண்டும்.

மேலும் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். டெங்கு நோயிற்குரிய அறிகுறி தெரியும் பட்சத்தில் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று வைத்தியரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். என்றார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு வவுனியாவில் டெங்கு நோயாளர்கள் 2216பேர் பொதுவைத்தியசாலை விடுதிகளில் சிகிச்சை பெற்றுள்ளமை குறிப்படத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg