Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியலமைப்பின் மூலம் சிறுபான்மையினருக்கு பாதிப்பு இல்லை: ஹிஸ்புல்லாஹ்

In இலங்கை
Updated: 11:57 GMT, Jan 16, 2018 | Published: 11:57 GMT, Jan 16, 2018 |
0 Comments
1134
This post was written by : Ravivarman

சிறுபான்மையினருக்கு பாதிப்பான எந்தவொரு விடயத்தினையும் அரசியலமைப்பு மூலம் சுதந்திரக்கட்சி அனுமதியளிக்காது என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடியில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“அரசியலமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது அது குறித்து கட்சித் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூடி ஆராய்ந்தது.

அப்போது, அரசியலமைப்பு முன்மொழிவுகளில் உள்ளடங்கியிருந்த நிறைவேற்று ஜனாதிபதி முறை நீக்கம், வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட முஸ்லிம்களுக்கு பாதிப்பான விடயங்களை ஒருபோதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரிக்கக் கூடாது என நான் தெளிவாகக் கூறினேன்.

அது தொடர்பில் நீண்ட நேரம் வாத பிரதிவாதங்கள் செய்து இறுதியாக அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது என்று கட்சித் தீர்மானித்தது. அதற்கமைய நாடாளுமன்றத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது நிலைப்பாட்டை அறிவித்தது.

நாங்கள் மிகவும் நெருக்கடியான நிலையில் இருக்கின்ற போது எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளவும், எமக்கான இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் எம்மிடம் அதிகாரம் இருக்க வேண்டும். காத்தான்குடி நகர சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுமையாக ஆட்சியமைக்கும் போது அது எமக்கு தேசிய ரீதியில் பல நன்மைகளைப் பெற்றுத்தரும். தேசிய ரீதியில் அது பேசுபொருளாக மாறும்.

எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன காத்தான்குடிக்கு பிரதான பிரசாரக் கூட்டத்திற்கு வருகை தரவுள்ளார். இந்தக் கூட்டம் அதிகளவான முஸ்லிம்கள் பங்கேற்ற கூட்டமாக வரலாற்றில் பதிவாகும் என நம்புகின்றோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg