Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிணைமுறி அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

In இலங்கை
Updated: 14:48 GMT, Jan 16, 2018 | Published: 14:48 GMT, Jan 16, 2018 |
0 Comments
1099
This post was written by : Ravivarman

பிணைமுறி ஆணைக்குழுவின் அறிக்கை நாளை (புதன்கிழமை) நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகவியலாள ர் மாநாட்டின் போதே இன்று அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, பிணை முறி அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பித்தவுடன் அதனை நாடாளுமன்ற இணையத்தளத்திலும் வெளியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே குறித்த பிணைமுறி அறிக்கை அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது கூட்டு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தினைக் குழப்பும் வகையில் செயற்பட்டதுடன், மோதலிலும் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg