Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தவின் வீட்டில் கூட்டம்! – பிரதமருக்கு எதிராக 30 பேர் களத்தில்!

In இலங்கை
Updated: 15:00 GMT, Jan 16, 2018 | Published: 15:00 GMT, Jan 16, 2018 |
0 Comments
1757
This post was written by : Puvanes

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேணையில் இதுவரையிலும் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியில் அங்கத்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கூட்டுஎதிர்க்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் பந்துல கூறியுள்ளார்.

மஹிந்தவின் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தின் போது மத்தியவங்கியில் இடம்பெற்ற ஊழல் மற்றும் தற்போது வெளியாகியுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் பந்துல மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மத்தியவங்கி ஊழலுடன் பிரதமர் நேரடியாக தொடர்புபட்டுள்ளமை அம்பலமாகிவிட்டதாகவும் இதனால் அவர் பதவி விலகவேண்டும் எனவும் கூட்டு எதிர்கட்சியினர் கோரிக்கையினை முன்வைத்துவருகின்றனர்.

அதேபோன்று எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மாற்றி புதிய பிரதமரை ஜனாதிபதி நியமிக்கப்படவுள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு பின்னர் ஜனாதிபதியில் செயற்பாடுகள் எவ்வாறு அமையப்போகின்றது என்ற எதிர்பார்ப்புகள் அரசியல் வட்டாரங்களை பரபரப்படைய வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg