Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரைவில் இலங்கையின் புதிய வரைபடம்!

In இலங்கை
Updated: 15:17 GMT, Jan 16, 2018 | Published: 15:45 GMT, Jan 16, 2018 |
0 Comments
1745
This post was written by : Ravivarman

இலங்கையின் நில அளவைத் திணைக்களத்தினால் இலங்கையின் புதிய வரைபடம் சுமார் 18 வருடங்களின் பின்னர் தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 18 வருட காலப்பகுதியில் இலங்கை நிலப்பரப்பில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதுடன், புதிய வரைப்படத்தில் இலங்கையின் துறைமுக நகரமும் உள்ளடக்கப்படவுள்ளது.

இதேவேளை இலங்கையின் தெற்கு மற்றும் கிழக்கு கடற்கரைப் பரப்புக்கள் அதிகரித்துள்ளதுடன், சிலாபம் கடற்கரை குறைவடைந்துள்ளதாக புதிய வரைபடம் மூலம் தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளதாக நிளஅளவையாளர் அதிகாரி உதயகாந்த தெரிவித்துள்ளார்.

இலங்கையின் புதிய வரைபடமானது செய்மதி உதவியுடன் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதன் பணிகள் நிறைவடைந்ததும் புதிய வரைபடமானது உத்தியோகப்பூர்வமாக நில அளவைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg