Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தபால் மூல முதலாம் கட்ட வாக்களிப்பு ஆரம்பம்!

In இலங்கை
Updated: 15:27 GMT, Jan 16, 2018 | Published: 15:27 GMT, Jan 16, 2018 |
0 Comments
1176
This post was written by : Ravivarman

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களப் பிரதித் தலைவர் எச். எம். மொஹமட் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் தபால் மூல வாக்களிப்பில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

25 மற்றும் 26 ஆம் திகதிகளில் ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் இடம்பெறவுள்ளது.  நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்தேர்தல் பணிகளுக்கான அதிகப்படியான தபால் மூல வாக்காளர்கள் எண்ணிக்கை குருணாகல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

இதன்படி குருணாகல் மாவட்டத்தில் தபால் மூல வாக்காளர்கள் தொகை 67 ஆயிரமாக பதிவாகியுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக கண்டி மாவட்டத்தில் 48 ஆயிரம் பேரும், அநுராதபுர மாவட்டத்தில் 45 ஆயிரம் பேரும் பதிவாகியுள்ளனர்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg