Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர் தயார்: கெஹெலிய

In இலங்கை
Updated: 17:00 GMT, Jan 16, 2018 | Published: 17:00 GMT, Jan 16, 2018 |
0 Comments
1379
This post was written by : Ravivarman

எதிர்வரும் 2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு கூட்டு எதிரணியின் வேட்பாளர் தயாராகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்படவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் ஜனாதிபதி வேட்பாளரை களமிறக்குவதற்கு கூட்டு எதிரணி தயாராக இருக்கின்றது.

சிங்கள மக்களினதும் தமிழ் மக்களினதும் நன்மதிப்பினைப் பெற்ற ஒருவரை வெற்றி வேட்பாளராகத் தெரிவு செய்துள்ளோம். நேரம் வரும்போது அவரை களத்தில் இறக்குவோம்.

நீதிமன்றத்தின் அறிவிப்பின்படி ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் எனத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே மக்களை அரசாங்கம் தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg