Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொலம்பியாவில் ஹெலிகொப்டர் விபத்து: 10 பேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 04:40 GMT, Jan 17, 2018 | Published: 04:40 GMT, Jan 17, 2018 |
0 Comments
1164
This post was written by : Suganthini

கொலம்பியாவின், சொகோவியா (Segovia) நகரில் ராணுவத்தினருக்குச் சொந்தமான ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளானதில், 10 பேர் உயிரிழந்துள்ளதாக, ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் தயாரிப்பான எம்.ஐ.71  இலக்கமுடைய ஹெலிகொப்டரே, நேற்று (செவ்வாய்க்கிழமை) விபத்துக்குள்ளானது.

இந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான வேளையில், அக்ஹெலிகொப்டரில் 8 ராணுவத்தினரும் 2 பொதுமக்களும் இருந்துள்ளனர். இதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும், ராணுவத்தினர் கூறியுள்ளனர்.

சடலங்களை மீட்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவத்தினர் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg