Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். பல்கலை மாணவர்களுக்கான தடை நீங்கியது!

In இலங்கை
Updated: 04:49 GMT, Jan 17, 2018 | Published: 04:49 GMT, Jan 17, 2018 |
0 Comments
1159
This post was written by : Risha

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தடை நீக்கப்பட்டு, அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை (வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்நுழைய மாணவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நீக்கப்பட்டதற்கமைள பதிவாளர் விஸ்வநாதன் காண்டீபன் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக கலைபீடத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு இடையில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்தனர்.

குறித்த சம்பவத்தை அடுத்து, பல்கலைக்கழகத்தின் 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற்குள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

அத்துடன், சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கு மறுஅறிவித்தல் வரும்வரை தற்காலிக வகுப்புத்தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg