Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கடத்தல் தொடர்பான வழக்கின் சாட்சிகளுக்கு உயிர் அச்சுறுத்தல்

In இலங்கை
Updated: 06:30 GMT, Jan 17, 2018 | Published: 06:29 GMT, Jan 17, 2018 |
0 Comments
1059
This post was written by : Ravivarman

5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுடன் தொடர்புபட்ட நால்வருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நேற்று (செவ்வாய்க்கிழமை) கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்னவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த விவகாரத்தில் பிரதான சாட்சியாளர்களான லெப்டினன்ட் கொமாண்டர் வெல்கெதர, கடற்படை முன்னாள் சிப்பாய் அளுத்கெதர உபுல் பண்டார, பிரதான விசாரணை அதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க அவர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன ஆகியோருக்கே இந்த உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி. வெலி அமுனவினவினால் நீதிவானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதில் பிரதான விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் திஸநயக்க தலைமையிலான பொலிஸ் குழுவும் சட்டத்தரணி அச்சலா செனவிரத்னவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் வாழைத் தோட்டம் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையில் அது தொடர்பில் இரு வேறு வழக்குகள் புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் போது நீதிவானுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தனியாக இடம்பெறும் விசாரணைகளை அவ்வாறே தொடர ஆலோசனை வழங்கிய நீதிவான் சாட்சியாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்வங்கள் தொடர்பில் பதிவாகியுள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக விசாரணை செய்து சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு கோட்டை நீதிவான் லங்க ஜயரத்ன முன்னிலையில் மீளவும் விசாரணைக்கு வந்தது.

இதன் போதே பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜே.சி.வெலி அமுனவின் கருத்துரையை செவிமடுத்து நீதிவான் இந்த ஆலோசனையை வழங்கினார்.

அத்துடன் இந்த விவகாரத்தில் தற்போது கைது செய்யப்படுவதற்காக தேடப்பட்டு வரும் கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சியைக் கைது செய்ய சர்வதேச பொலிஸார் ஊடாக சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் பகிரங்க பிடியாணையையும் நீதிவான் பிறப்பித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg