Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் மீது குற்றச்சாட்டு

In இலங்கை
Updated: 08:13 GMT, Jan 17, 2018 | Published: 06:53 GMT, Jan 17, 2018 |
0 Comments
1076
This post was written by : Ravivarman

வவுனியா வர்த்தக சங்கத் தலைவர், கட்சி சார்ந்து செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வவுனியா வர்த்தக சங்கத் தலைவராக பதவி வகித்துவந்த ரி.கே.இராஜலிங்கம், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதால் தனது சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியிருந்தார். இதனையடுத்து சங்கத்தின் உப தலைவராக இருந்த தியாகத்தலி என்பவரது சகோதரன் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாலும் தேர்தல் நேரம் என்பதாலும் அவர் தலைமை பதவியை ஏற்கவில்லை.

இந்த நிலையில் தற்காலிக தலைவராக எஸ்.கிரிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக, கட்சி ஒன்றிடம் விண்ணப்பித்தார். எனினும், அக்கட்சி சார்பில் தனது வட்டாரத்திலே தனது உறவினர் ஒருவர் போட்டியிடுவதால் தேர்தலில் போட்டியிடாது விலகிக்கொண்டார். அதன் பின்னர் வர்த்தக சங்கத் தலைவர் பதவியைப் பெற்றுள்ளார்.

எனினும், அவர் முன்பு தேர்தலில் போட்டியிடுவதற்காக விண்ணப்பித்த கட்சி சார்பாகவே செயற்படுவதுடன் அவர்களது பிரசார கூட்டங்கள் சிலவற்றிலும் கலந்துகொண்டுள்ளதாக வர்த்தகர்கள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg