Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ்: நேற்றைய போட்டி முடிவுகள்

In டெனிஸ்
Published: 07:26 GMT, Jan 17, 2018 |
0 Comments
1118
This post was written by : Anojkiyan
open

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இரண்டாம் நாளான நேற்று (செவ்வாய்க்கிழமை), ரோஜர் பெடரர், ஜோகோவிச், வவ்ரிங்கா, சிமோனா ஹெலப், மரியா ஷரபோவா, முகுருசா, ரட்வன்ஸ்கா ஆகியோர், முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று போட்டியொன்றில் நடப்பு சம்பியனும், உலக தரவரிசையில் 2வது இடத்தில் இருப்பவருமான சுவிஸ்லாந்தின் ரோஜர் பெடரர், 6-3, 6-4, 6-3 என்ற நேர்செட்டில் 51ஆம் நிலை வீரரான சுலோவேனியாவின் அல்ஜாஸ் பெடெனேவை தோற்கடித்து 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு முதல் சுற்று போட்டியில், முன்னாள் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், 6-1, 6-2, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீரர் டொனால்ட் யங்கை சாய்த்து 2வது சுற்றுக்குள் நுழைந்தார்.

அதேபோல் மற்றுமொரு போட்டியில், சுவிஸ்லாந்தின் ஸ்டென் வவ்ரிங்கா, 6-3, 6-4, 2-6, 7-6 என்ற செட் கணக்கில் லிதுவேனியாவின் ரிக்கார்டஸ் பெரான்கிஸை வீழ்த்தினார்.

இதுதவிர பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில், பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், உலகின் முதல் நிலை வீராங்கனையான, ரோமேனியாவின் சிமோனா ஹெலப், அவுஸ்ரேலிய வீராங்கனை டெஸ்டாணி அயவாவை 7-6, 6-1 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.

மற்றொரு போட்டியில், ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஜேர்மனியின் டட்ஜனா மரியாவை 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல, 3ஆம் நிலை வீராங்கனையான கர்பீன் முகுருசா, பிரான்ஸின் ஜெசிகா பொன்சீட்டை 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வீழ்த்தினார்.

போலாந்தின் அக்னிஸ்கா ரட்வன்ஸ்கா, 2-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவை வீழ்த்தி வெற்றிபெற்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg